தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: மேலும் 2,708 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 2,708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் புதிதாக 2,708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 747 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 8-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,95,596லிருந்து 1,95,378 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 4,014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,67,475-ல் இருந்து 6,71,489 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 32 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 18 பேர், தனியார் மருத்துவமனைகளில் 14 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,956 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 72,236 மாதிரிகளும் இதுவரை 95,89,743 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,11,713 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 29,268 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மேலும் 70,898 பேருக்கும், இதுவரை 92,26,347 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.