திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.;
சென்னை
கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், தியேட்டர் அதிபர்கள், ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி வருவாய் முடங்கியுள்ளது. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசினர். தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 22ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படும் என கூறப்படுகிறது ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.