கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-10-02 08:43 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டும் கூட்டத்தில் மக்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கூறி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்