சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2020-10-02 05:47 GMT
சென்னை,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- “
அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். 

அதேபோல், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான இந்நன்னாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் தியாகங்களையும் நாட்டுப் பற்றையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனனவரையும் வழிநடத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்