விபத்து வழக்கில் டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையை பின்பற்றாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விபத்து வழக்கில் டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையை பின்பற்றாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சண்முகம் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘விபத்து நடந்து பல நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் எண் உள்ளிட்ட தகவல்கள் தரப்படவில்லை. இதை தீர்ப்பாயம் கவனிக்க தவறிவிட்டது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் விபத்துகளில் சிக்கி பலியாகிறார்கள். தினமும் சராசரியாக 300 பேரும், ஒரு மணி நேரத்திற்கு தலா 10 பேரும் விபத்தில் பலியாகிறார்கள். விதிகளை மீறி வாகனங்களை இயக்குவது தான் இதற்கு காரணம். விதிமீறலால் சாலையில் நடந்து செல்பவர்களும் பலியாகும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காலதாமதம் செய்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க விபத்து தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே விரைந்து இழப்பீடு வழங்க வழி ஏற்படும்.
விபத்து தொடர்பான ஆவணங்களை உடனடியாக ‘கிரைம்’ மற்றும் ‘கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று 2017-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி தமிழக டி.ஜி.பி. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, விபத்து நடந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதன்பின்பு விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இறுதி அறிக்கையில் விபத்து தொடர்பான ஆவணங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.
இந்த நடைமுறையை அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவது இல்லை. இதன் காரணமாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, டி.ஜி.பி. உத்தரவை விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
90 நாட்களுக்குள் அனைத்து தகவல்களும் அடங்கிய இறுதி அறிக்கையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இறுதி அறிக்கையில் பாதிக்கப்பட்டவர், அவரது மனைவி, குழந்தைகள் பெயர், செல்போன் எண், ஆதார் விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மாதம் ஒரு முறை டி.ஜி.பி. ஆய்வு செய்ய வேண்டும். டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையை அமல்படுத்த தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளும், விபத்து வழக்குகள் தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் 7 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.