பயனாளர் கட்டணம் என்ற பெயரில் மறைமுக ரெயில் கட்டண உயர்வை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ரெயில் கட்டணத்துடன் சேர்ந்து ரெயில் நிலைய பயனாளர் கட்டணமும் வசூலிக்கப்பட இருப்பதாக இந்திய ரெயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது.

Update: 2020-09-19 21:47 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில் கட்டணத்துடன் சேர்ந்து ரெயில் நிலைய பயனாளர் கட்டணமும் வசூலிக்கப்பட இருப்பதாக இந்திய ரெயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. பயனாளர் கட்டணம் என்ற பெயரில் ரெயில் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ரெயில் சேவை என்பது ஏழைகளுக்கானது ஆகும். அந்த சேவையில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், ரெயில் சேவை என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும். எனவே, ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும் தொகையை திருப்பி எடுப்பதற்கு மாற்று வழிகளை ஆராய வேண்டும். பயனாளர் கட்டண முறையை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்