பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று, தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Wishing Hon’ble Prime Minister @narendramodi a happy birthday. May you have a long life with good health and continue your service to the nation.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2020