கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-09-13 21:23 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் டாக்டர் செல்லகுமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சென்னையில் அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரமாக என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது செல்லகுமார் எம்.பி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்