தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,820 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,04,186 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,458 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் - 37
செங்கல்பட்டு - 361
சென்னை - 955
கோவை - 538
கடலூர் - 388
தர்மபுரி - 24
திண்டுக்கல் - 118
ஈரோடு - 117
கள்ளக்குறிச்சி - 184
காஞ்சிபுரம் - 196
கன்னியாகுமரி - 116
கரூர் - 43
கிருஷ்ணகிரி - 84
மதுரை - 111
நாகை - 136
நாமக்கல் - 96
நீலகிரி - 48
பெரம்பலூர் - 17
புதுக்கோட்டை - 100
ராமநாதபுரம் - 42
ராணிப்பேட்டை - 135
சேலம் - 122
சிவகங்கை - 33
தென்காசி - 53
தஞ்சாவூர் - 150
தேனி - 84
திருப்பத்தூர் - 44
திருவள்ளூர் - 246
திருவண்ணாமலை - 272
திருவாரூர் - 123
தூத்துக்குடி - 50
திருநெல்வேலி - 132
திருப்பூர் -153
திருச்சி - 111
வேலூர் - 157
விழுப்புரம் - 130
விருதுநகர் - 67 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.