தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத் துறை தகவல்

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-09-05 12:42 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 5,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,748 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை 50,42,197 ஆக உள்ளது.  

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 81,793 மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 52,12,534- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 51,583 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்