செப்டம்பர் 2 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் முழு விவரம்

செப்டம்பர் 2 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-09-02 13:56 GMT
சென்னை:

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,80,063 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,891 பேர் இன்றுகுணமடைந்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிபிற்கு 52,380 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இன்று மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 57 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,516 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,22,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,788 ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 154 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 90 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 49,64,141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 75,829 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,65,688 பேரும், பெண்கள் 1,74,242 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 20,131 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,62,522 பேரும், 60 வயதிற்கு மேல் 57,306 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது! தமிழகத்திலேயே குறைந்த அளவாக பெரம்பலூரில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

செப்டம்பர் 2 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


மாவட்டம்செப். 2 பாதிப்புமொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்மொ.இறப்பு
அரியலூர்432,8622,41841331
செங்கல்பட்டு39026,90723,6802,788439
சென்னை1,0251,37,7321,22,40712,5372,788
கோயம்புத்தூர்57916,66212,0784,269315
கடலூர்40512,1459,0362,981128
தருமபுரி541,3091,12816813
திண்டுக்கல்1366,8025,783890129
ஈரோடு1063,3592,1851,13044
கள்ளக்குறிச்சி546,3435,39387179
காஞ்சிபுரம்13317,66315,6481,759256
கன்னியாகுமரி1119,8218,6351,001185
கரூர்641,6821,22443226
கிருஷ்ணகிரி492,2361,79840632
மதுரை12314,38613,222804360
நாகப்பட்டினம்712,8451,97782345
நாமக்கல்832,2981,62463539
நீலகிரி141,6671,33931711
பெரம்பலூர்101,3471,22310717
புதுகோட்டை766,2455,0171,126102
ராமநாதபுரம்574,8154,315393107
ராணிப்பேட்டை9810,7969,804867125
சேலம்40311,8267,9423,724160
சிவகங்கை254,1143,756249109
தென்காசி825,5474,701742104
தஞ்சாவூர்1476,8865,785984117
தேனி9512,82711,4281,252147
திருப்பத்தூர்943,0002,46846963
திருவள்ளூர்28525,33023,4431,474413
திருவண்ணாமலை21310,8259,3391,317169
திருவாரூர்1333,8192,99777547
தூத்துக்குடி5711,53210,577841114
திருநெல்வேலி1109,7968,3861,232178
திருப்பூர்872,9041,94189469
திருச்சி1207,6846,664898122
வேலூர்15911,0819,8371,073171
விழுப்புரம்2247,8216,5151,23670
விருதுநகர்6212,84212,250401191
விமான நிலையத்தில் தனிமை2921893271
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை11854781730
ரயில் நிலையத்தில் தனிமை042842620
மொத்த எண்ணிக்கை5,9904,39,9593,80,06352,3807,516

மேலும் செய்திகள்