தடையை மீறி மதுரையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய கபடி போட்டி
ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் நடந்த கபடி போட்டியில் நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளி இன்றி திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
மதுரை,
ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கபடி போட்டி நடைபெற்றது. செல்லூர் மேம்பாலம் அருகிலுள்ள வறண்ட வைகை ஆற்றில் நடந்த போட்டியில்,10க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர்.
கபடி போட்டி குறித்து கேள்விப்பட்டு அப்பகுதிக்கு நூற்றுக்கணக்கில் வந்த பொதுமக்கள் கபடி போட்டியை பார்வையிட்டனர். சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் கபடி போட்டி நடைபெற்ற விவகாரம் மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.