தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு பத்திரிகைகளுக்கு தடை இல்லை
கொரோனா நோய் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் 6-வது கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.;
சென்னை,
கொரோனா நோய் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் 6-வது கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தொடர்ந்து 4 வாரத்திற்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது முழு ஊரடங்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்சுகளுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச்செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு பத்திரிகைகளை எடுத்துச்செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.