திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் ஜூலை 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் ஜூலை 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுகிறது.

Update: 2020-07-10 08:03 GMT
திண்டுக்கல்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து

நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக நத்தம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நத்தம் பேரூராட்சி, தாலுகா அளவில் உள்ள 23 கிராம ஊராட்சிகளிலும் நாளை (சனிக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு நத்தம் வர்த்தகர்களும், கிராமப்புற அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதில் அத்தியாவசிய பொருட்களான பால், மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் சேக் ஒலி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்