சித்த மருத்துவ சிகிச்சையில் 700 பேர் குணம் அடைந்தனர்

சென்னை வளசரவாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.;

Update: 2020-07-08 21:23 GMT
சென்னை,

சென்னை வளசரவாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இங்கு கொரோனா தொற்று முதல்கட்ட நிலையில் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சித்தா டாக்டர் கே.வீரபாபு தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்தா மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக அதிகரிப்பதால், இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் சீக்கிரமாக குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.

இங்கு நேற்று வரை ஆயிரத்து 50 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 700 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக சித்தா டாக்டர் வீரபாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்