ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி
ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது வரை சென்னையில் 1,300 க்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.