விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம் பிறப்பிக்க கோரி அமித்ஷாவுக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-07-02 18:25 GMT
சென்னை,

விசாரணை மரணங்கள் மற்றும் காவல்துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, தாம் எழுதிய கடிதத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், தமது தொகுதியில், காவல் நிலைய விசாரணை பெயரில் சித்ரவதை செய்து, தந்தை, மகன் மரணம் அடைந்ததை குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மரணங்கள் இனியும் நிகழாமல் இருக்க உடனடியாக அவரச சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்