மராட்டிய மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தொற்று அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-06-13 05:18 GMT
சென்னை

2,000 செவிலியர்கள் இன்று பணி நியமனம் செய்யபட்டனர்.  புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னை, காஞ்சீபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு இயந்திரம் இரவு, பகல் பாராமல், ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது.

தொற்று அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தில் சோதனை அதிகரிப்பால் அதிக கொரோனா பாதிப்பை கண்டறிய முடிகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்