தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-06-06 16:44 GMT
சென்னை,

ஊரடங்கின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 30ம் தேதி அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,

* ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்.

* ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

* உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உண்ண அனுமதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்