ஜூன் மாதத்திலேனும் நோய்ப் பரவல் தடுப்பில் ஈடுபட வேண்டும்; தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா லாக்டவுனை தமிழக அரசு தன் சுய விளம்பரத்திற்காக வீணடித்தது போல் இன்றி, ஜூன் மாதத்திலேனும் நோய்ப் பரவல் தடுப்பில் ஈடுபட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update: 2020-06-01 10:35 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொற்று எண்ணிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாமிடம், 173 உயிரிழப்புகள்.வெண்டிலேட்டர்கள் கூட போதுமான எண்ணிக்கையில் வாங்கப்படவில்லை.

அரசின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை, மேலும், அதிகமான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். கொரோனா தோல்வியை திசை திருப்பும் நோக்கில், அரசு கதை கதையாக பேசி வருகிறது.

தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்திருந்தால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது எப்படி? வெண்டிலேட்டர் கொள்முதல், படுக்கைகள் உருவாக்குவதில் இன்னமும் அரசு அலட்சியம் காட்டுகிறது. எனவே, ஜூன் மாத ஊரடங்கை முறையாக பயன்படுத்தி, கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்