திருப்பூரில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு நடந்து சென்ற 11 தொழிலாளர்கள் மீட்பு
திருப்பூரில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு நடந்து சென்ற 11 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 11 பேருக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கு செல்ல அந்த நிறுவனத்தினர் வற்புறுத்தி உள்ளனர். இதனால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒடிசாவில் உள்ள தங்களது நண்பர்களிடம் பணம் அனுப்ப சொல்லி சாப்பிட்டு வந்தனர். அந்த பணமும் தீர்ந்ததால் சாப்பிட வழியின்றி தவித்த அவர்கள் நடந்தே ஒடிசா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 28-ந் தேதி திருப்பூரில் இருந்து 11 தொழிலாளர்களும் நடந்தே ஒடிசாவுக்கு புறப்பட்டனர். அவர்கள் நேற்று காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரம் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த சமூக ஆர்வலர் சிலர் பார்த்து அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கடந்த 2 நாட்களாக சாப்பிடாமல் நடந்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு உணவு வாங்கி தந்த சமூக ஆர்வலர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர்களை வாகனத்தில் கிருஷ்ணகிரிக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், திருப்பூர் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதில் திருப்பூரில் இருந்து இரவு சிறப்பு ரெயில் ஒடிசா மாநிலத்திற்கு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் இருந்து தொழிலாளர்கள் 11 பேரும் ஒரு வேனில் ஏற்றி திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இரவு திருப்பூரில் இருந்து ஒடிசா செல்லும் சிறப்பு ரெயிலில் சொந்தமாநிலத்துக்கு சென்றனர்.