தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.752 குறைவு
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.752 குறைந்தது.;
சென்னை,
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கு இருக்கும் இந்த நேரத்திலும், தங்கம் விலை எகிறி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 578-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 624-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 94-ம், பவுனுக்கு ரூ.752-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 484-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 872-க்கும் விற்பனை செய்யப்பட்டது.