10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2020-05-18 05:53 GMT
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன்  அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனைக்குப் பிறகு  அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்