18-ந்தேதி முதல் சலூன் கடைகள் திறப்போம் - சவர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

சமூக இடைவெளி, பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து 18-ந்தேதி முதல் சலூன் கடைகள் திறப்போம் என்று சவர தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.;

Update: 2020-05-12 20:02 GMT
சென்னை, 

தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எம்.முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முடிதிருத்தும் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் வருகிற 18-ந்தேதி முடிவெட்டும் கடைகளை திறப்பது தொடர்பான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று கடை திறக்க அனுமதி மறுக்கும் பட்சத்தில் வருகிற 18-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகளை அரசு குறிப்பிட்டிருந்த சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்தியும் பாதுகாப்பான முறையில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்களும் முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்