தமிழகத்தில் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு: அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - ஸ்டாலின்

தமிழகத்தில் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-05-05 06:40 GMT

சென்னை,

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு. ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல.

லாக் டவுன் காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகளை வலியுறுத்திப் பெற்று வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்