கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்-தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அதிக பாதிப்பு கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,53,489 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக உயர்ந்துள்ளது.