கொரோனாவுக்கு 74 வயது மூதாட்டி உயிரிழப்பு - சென்னையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சென்னையில் கொரோனாவுக்கு 74 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.இதன் மூலம் சென்னையில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-05-02 23:45 GMT
சென்னை, 

சென்னையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை திரு.வி.க. நகர் மண்டலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இதுவரை 16 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை சூளை பகுதியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சளி, இருமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் வீட்டு வேலைக்காரப் பெண் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த 74 வயதான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்