தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது” என்றார்.