சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, கனிமொழி எம்.பி வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2020-03-08 08:01 GMT
சென்னை,

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

சர்வதேச மகளிர்  தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும்.  

பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்