பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.;
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 482 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 1,300 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,900 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.67 அடியாக இருந்தது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 397 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 1,300 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.32 அடியாக இருந்தது.
இந்நிலையில் இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 414 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,400 கன அடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக உள்ளது. நீர் இருப்பு - 25.8 டிஎம்சி ஆக உள்ளது.