சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி உதவித் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.;

Update: 2020-01-13 06:24 GMT
சென்னை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை முதல்வர் பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

நிதியை பெற்றுக்கொண்ட பின்னர் வில்சனின் மனைவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வாங்கி தருவதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் ஏற்படக்கூடாது. மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக முதல்வர் கூறி உள்ளார் என கூறினார்.

மேலும் செய்திகள்