உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - ப.சிதம்பரம்
உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
உள்ளாட்சியில் காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல. 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.