ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? -கவிஞர் வைரமுத்து

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-10 10:16 GMT
சென்னை,

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? என்று கேள்வி  எழுப்பியுள்ளார். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதும் தனக்கு கவலையளிப்பதாக அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு வைரமுத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்