புத்தக கண்காட்சிக்கு அடுத்த ஆண்டு முதல் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
புத்தக கண்காட்சிக்கு அடுத்த ஆண்டு முதல் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் 43-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 21-ந்தேதி வரை சென்னையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், கேபி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இன்று தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியானது, வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.