ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.;
சென்னை,
பதவிகள் | அ.தி.மு.க. கூட்டணி | தி.மு.க. கூட்டணி | மற்றவர்கள் |
மாவட்ட கவுன்சிலர் | 225 | 251 | 2 |
ஒன்றிய | 2049 | 2263 | 517 |
ஆதாரம்: தந்தி டிவி
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.
முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்பட 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று உள்ளது. 6 மாவட்டங்களில் முழுமையாக நிறைவுபெறவில்லை.
ஒன்றிய கவுன்சிலர்: திமுக - 2,263, அதிமுக - 2,049, அமமுக 90, நாம் தமிழர் - 1, மற்றவை - 425- மாவட்ட கவுன்சிலர்: திமுக 251, அதிமுக 225 இடங்களில் வென்றுள்ளது.
ஈரோட்டில் 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது. அதிமுக. 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது.
11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை வென்று கன்னியாகுமரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக.
கரூரில் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்று கரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக. 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது.
கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் வென்று கோவை மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக. திமுக 4 இடங்களில் வென்றுள்ளது
சேலத்தில் மொத்தம் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 15 இடங்களில் வெற்றி - திமுக ஒரு இடத்தில் வெற்றி.
தருமபுரியில் மொத்தம் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று தருமபுரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக. 4 இடங்களை திமுக வென்றுள்ளது
ஈரோட்டில் மொத்தம் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று ஈரோடு மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக. 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது
கிருஷ்ணகிரியில் மொத்தம் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக. 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக வென்றுள்ளது - சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி.
தேனியில் 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களில் அதிமுக வெற்றி - 2 இடங்களில் திமுக வெற்றி
17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று திருப்பூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி. 4 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது
17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை வென்று தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. 4 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை வென்று அரியலூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி, 1 மாவட்ட கவுன்சிலர் பதவி இடத்தில் திமுக கூட்டணி வென்றுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டி அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என கூறினார்.