ஊராட்சி தேர்தல் நிலவரம்: 79 வயது மூதாட்டி வீரம்மாள் - 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா வெற்றி
ஊராட்சி தேர்தலில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் - 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா வெற்றி பெற்று உள்ளார்.;
சென்னை
பதவிகள் | அ.தி.மு.ககூட்டணி | தி.மு.க. கூட்டணி | மற்றவர்கள் |
மாவட்ட கவுன்சிலர் | 122 | 143 | 0 |
ஒன்றிய | 551 | 713 | 47 |
தகவல்: தந்தி டிவி
* நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பர்லியார் ஊராட்சி மன்ற தலைவராக சுசிலா வெற்றி
* தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலத்தில் எம்.பி பார்த்திபன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
* எடப்பாடியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லை என கூறி திமுகவினர் போராட்டம்
* நாகை: ராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக அகோரம் வெற்றி
* கிருஷ்ணகிரி: கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* திருச்சி: லால்குடியில் மறுதேர்தல் நடத்த புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல்
* மதுரை: 79 வயதான மூதாட்டி அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு 2 முறை தோல்வியை தழுவிய நிலையில் 3-வது முறையில் வெற்றி பெற்றார்.
* அரியலூர்: சன்னாசிநல்லூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்வி செங்குட்டுவன் வெற்றி
* க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தென்னிலை கிழக்கு ஊராட்சி மன்ற தலைவராக சவுந்திரம் வெற்றி.
* இராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் தோல்வி அடைந்தார்.