சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன் - ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து டுவீட்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் வைரமுத்து சந்தித்து பேசினார்.

Update: 2019-12-08 07:48 GMT
சென்னை,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து தற்போது அவர் வெளியே உள்ளார். 

இந்நிலையில் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்திற்கு வைரமுத்து சென்று சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன், சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்