சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் பணிநாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.