மின்சார தடையின்றி பழுது பார்த்த மின்துறை ஊழியர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து

பிரத்யேக உடை அணிந்து மின்சார தடையின்றி பழுது பார்த்த மின்துறை ஊழியர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-21 17:09 GMT
சென்னை,

தமிழக மின்துறையில் புதிதாக 400 கிலோவோல்ட் மின்சாரத்தை நவீன முறையில், பிரத்யேக உடை அணிந்து மின்சார தடையின்றி பழுது பார்க்கும் ஊழியர்களுக்கு, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மின் ஊழியர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த பணிகளை செய்வது பாராட்டுக்குரியது என்றும், இந்த முயற்சியில் ஈடுபட்ட தமிழக அரசுக்கும், மின்துறைக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்