இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Update: 2019-10-10 12:01 GMT
சென்னை,

கடந்த மக்களவை தேர்தலின் போது புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பட்டியல் பிரிவில் உள்ள 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த குழுவின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிப்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இன்று நாங்குநேரியில் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரம் செய்கையில் புதிய தமிழகம் கட்சியின் கொடியும் இருந்தது. இதனால், அக்கட்சியினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

கோரிக்கையை நிறைவேற்றாததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை. சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம், ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திரகுல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்