உச்சத்தை தொடும் பெட்ரோல்-டீசல் விலை: கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து எரிபொருள் விலைகள் மீண்டும் உயர தொடங்கியுள்ளன. கடந்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99-ம், டீசல் விலை ரூ.2.46-ம் உயர்ந்துள்ளன. இனிவரும் நாட்களில் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சங்களை எட்டும் என தெரிகிறது.
இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரத் தொடங்கியிருப்பதால் மக்களின் துயரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
கடந்த 2008-09-ம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது அதை சமாளிக்க பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், இப்போது பெருநிறுவனங்கள் மீதான வரி ரூ.1½ லட்சம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல்-டீசல் மீதான வரி ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. இது நியாயமல்ல.
எனவே, அடித்தட்டு மக்களின் சுமையை ஓரளவாவது கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு குறைந்தது ரூ.5 குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-