முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல் அமைச்சர் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.;

Update: 2019-09-10 06:21 GMT
சென்னை, 

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னை விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  மூத்த அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று வரவேற்றனர். எனினும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையத்திற்கு சென்று முதல்வரை வரவேற்கவில்லை. 

இந்த நிலையில், இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இந்த சந்திப்பின் போது  வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் செய்திகள்