'தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்’ ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் - முகுல் வாஸ்னிக் பேச்சு
‘நாடாளுமன்ற தேர்தல் போலவே தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’ என்று முகுல் வாஸ்னிக் பேசினார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, செயல் தலைவர் எச்.வசந்தகுமார், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்பட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்துகொண்டு, ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதில் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பற்ற தலைவராக விளங்கினார். எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக நிறைய திட்டங்களை முன்னெடுத்தார். அவரது ஆட்சியில் இந்தியா வளர்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்தது.
ஆனால் இன்று அதையெல்லாம் அழிக்கும் வகையில் மோடி அரசாங்கம் செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் அரசியலமைப்பையே துண்டாடி இருக்கிறார்கள். மோடி- அமித்ஷா கூட்டணி நினைப்பதே நாட்டின் சட்டமாகிறது. ராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் மிரட்டப்பட்டு உள்ளனர். தலைவர்கள் சிறைவைக்கப்பட்டு உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலைப்போல தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலினும் அரியணை ஏறும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மேடைக்கு வந்த முகுல் வாஸ்னிக்குக்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் நாய்க்குட்டி ஒன்றை மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் பரிசாக அளித்தார். அந்த நாய்க்குட்டியை உடனடியாக வாங்கி குஷ்பு கொஞ்சி மகிழ்ந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘மத்தியில் உள்ள சர்வாதிகார அரசும், தமிழகத்தில் உள்ள அடிமை அரசும் விரட்டப்பட வேண்டும். ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு நம்மை அடக்க பார்க்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஒரு ஆலமரம் என்பது நிச்சயம் அவர்களுக்கு தெரியவரும்’ என்றார்.
சென்னை சத்திய மூர்த்திபவனில் நேற்று காலை நடந்த ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள்-தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.