தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
* 5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்.
* தண்ணீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும் என கூறினார்.