24 மணிநேரமும் கடை திறக்க தமிழகத்தில் அனுமதி: இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

24 மணிநேரமும் கடை திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.;

Update: 2019-06-07 13:53 GMT
சென்னை,

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு சட்ட மசோதா ஒன்றை உருவாக்கி மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. 

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாள் முழுவதும் திறந்து வைக்க இந்த மசோதா அனுமதி வழங்குகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப இந்த சட்ட அனுமதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, இதுபற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த தமிழக அரசு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில்,  24 மணிநேரமும் கடை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து தமிழகத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள்  24 மணி நேரமும்  திறந்து இருக்கும் நடைமுறை இன்று முதல்  அமலுக்கு வருகிறது. 

மேலும் செய்திகள்