எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பம் வினியோகம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு ‘ஆன்-லைனில்’ வினியோகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் நேற்று மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள் குழந்தைகளுக்கான காப்பகம், படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை, குழந்தைகளுக்கான விளையாட்டு அறை மற்றும் ‘அல்ட்ரா சோனாகிராம்’ அறை உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அலுவலர்கள், பணியாளர்கள் குழந்தைகளுக்கான நவீன காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை மருத்துவ கல்லூரியில் 150 மருத்துவ படிப்பு இடங்களை 250 ஆக அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. கரூர் புதிய மருத்துவ கல்லூரிக்கு 150 இடங்கள் கிடைக்கும்.
மதுரை மருத்துவ கல்லூரியில் 150 இடங்களில் இருந்து 250 இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசிடம் இருந்து வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900 மருத்துவ இடங்கள், பெருந்துறையில் 100 இடங்கள் என்று 3 ஆயிரம் இடங்கள் உள்ளன.
தற்போது 3 ஆயிரத்து 350 மருத்துவ இடங்கள் கிடைக்கும். முதுகலை மருத்துவ படிப்பிலும் 508 இடங்கள் அதிகரித்து இருக்கிறோம். இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு விண்ணப்ப படிவங்கள் ‘ஆன்-லைன்’ மூலம் வினியோகம் செய்யப்படும். மருத்துவ கலந்தாய்வு வழக்கமான முறையில் நடைபெறும்.
கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் செய்யாததால் சித்தா படிப்புக்கு ‘நீட்’ தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் கேட்டுள்ளோம். மேலும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.