வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து தி.முக சார்பில் முன்னாள் மத்திய மந்திரியும் கட்சியின் முதன்மை செயலாளருமான டி.ஆர் பாலு சந்தித்து ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மனுவில், வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும். ஒப்புகை சீட்டை சரிபார்க்கும் போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.