அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்: திமுக தொண்டர்கள் - காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் போலீஸ் குவிப்பு
அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக தொண்டர்கள் - காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.;
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைப்பெற்று வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 99 ஆயிரத்து 052, பெண்கள் 1 லட்சத்து 06 ஆயிரத்து 219, இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்து போக போலீஸ் வலியுறுத்தினர். கலைந்து செல்ல மறுப்பதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கூடியிருப்பதாக திமுக தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர். அதனைதொடர்ந்து வாக்குச்சாவடி அருகே கூடிய திமுக தொண்டர்களை காவல்துறையினர் கலைத்தனர்.