நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வைக்க வேண்டும் - ஜெயக்குமார்
நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;
சென்னை
சென்னை பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையர்கள் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் ஆணைய உள் விவகாரங்களில் அரசியல் கட்சிகள் கருத்துக்கூற முடியாது. நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்றார்.
கமலஹாசன் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நம்பி இருக்க வேண்டுமே தவிர மதங்களை நம்பி இருக்கக் கூடாது கமலஹாசன் வரலாற்றாசிரியராக மாறியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். ஸ்டாலினுக்கு பதவி மேனியாவும், டிடிவி தினகரனுக்கு பதவி மேனியாவுடன், பண மேனியா நோயும் தாக்கியுள்ளது என கூறினார்.