தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது. புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது தங்கத்தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது.
தி.மு.க. தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது, தாங்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை. தமிழகத்தில் மாணவர்கள் சிறப்பாக படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வாய்ப்புகளை பெறுகிறார்கள் என கூறினார்.